Friday, 14 November 2014

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை

பாலு, மூன்றாம் ஆண்டு பொறியியல் மாணவன். அதே வகுப்பில்  கயல்விழி  என்றொரு மாணவி படித்து வந்தாள. அவள் தஞ்சாவூரைச் சேர்ந்தவள். கல்லூரி  திருச்சியில் உள்ள மிக பெருமை வாய்ந்த கல்லூரி. ஒரு நாள் வீட்டிலிருந்து போன் கால் வந்தது. அதில் பாலுவின் தங்கை நிர்மலா பேசினாள். அவள் திருச்சி வழியாக வரும் போது தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வங்கி வருமாறு அன்பு கட்டளை போட்டாள். பாலுவுக்கோ தஞ்சாவூர் செல்ல சோம்பேறித்தனம் என்ன பண்ணுவது என்று யோசித்தான். பின்பு  ஒரு யோசனை தோன்றியது. கயல்விழி தஞ்சாவூர் தானே அவளை வங்கி வர சொல்லலாம் என்று நினைத்தான். இருந்தாலும் அவனுக்கு நேரில் சென்று கேட்க வெட்கமாக இருந்தது. அதனால் கயல்விழியின் நெருங்கிய நண்பன் அன்வரை விட்டு வாங்கி வருமாறு கேட்க சொன்னான்.

அன்வர் குறும்புத்தனம் மிகுந்தவன். அவனுக்கு குறும்புத்தனம் செய்வது அடுத்தவனை கோர்த்து விடுவது கை வந்த கலை. அவன் கயல்விழியிடம் சென்று "பாலு உன்னை காதலிக்கிறான். அவனுக்கு உன்னிடம் சொல்ல தைரியமில்லை" என்று கொளுத்தி போட்டு விட்டு சென்றான். அதன் பின் கயல்விழி பாலுவை தனியாக பேச  அழைத்து சென்றாள்.

கயல்: நீதான் அன்வரிடம் சொல்லி அனுப்பினாயா ?

பாலு: ஆம் நான் தான்  சொல்லி அனுப்பினேன்.

கயல்: ஏன்  சொல்லி அனுப்பினாய்? 

பாலு:  எனக்கு சொல்ல தயக்கமாக  இருந்தது.

கயல்:  இதற்கெல்லாம் ஒரு ஆள் வைப்பார்களா?

பாலு:  இதிலென்ன இருக்கிறது?

கயல்: நீயே வந்து நேரில் சொல்லியிருக்கலாம் 

பாலு:   முன்னாடியே சொல்லிட்டேன்.

கயல்: உனக்கு எவ்வளவு தைரியம், திமிரு இருந்தால் இவ்வாறு சொல்லி அனுப்பியிருப்பாய்.

பாலு: எனக்கு அது தேவை அதனால் சொல்லு அனுப்பினேன்.

கயல்: நான் நல்ல குடும்பத்து பெண்.

பாலு: அப்படியா ?

கயல்: இதெல்லாம் என் குடும்பத்துக்கு பிடிக்காது.

பாலு: இதெல்லாம் ஓவர்.

கயல்: எது ஓவர்?  நீ செய்ததா, இல்ல நான் செய்ததா? நீ என்ன லவ் பண்றியா 

பாலு: யார் சொன்னது? 

கயல்: அன்வர் தான் 

பாலு: நான் நீ நெனைக்கிற மாதிரி ஆள் இல்லை எனக்கு லட்சியம் இருக்கு.

இவர்களின் வாக்குவாதம் சென்று கொண்டிருக்கையில் ஒரு அலறல் சத்தம். கூட்டம் கூடியது. கயல்விழி மண்டை உடைந்து ரத்தம் சிந்தி கொண்டிருந்தது.

காரணம் அவன் பேசிய வசனம் 

நான் பெண் முகம் பார்க்க வந்தவன் அல்ல 
கல்வியின் முக்கியத்துவம் அறிந்தவன்.

நான் பெண் கண்ணை நோக்க வந்தவன் அல்ல 
கண்ணும் கருத்துமாய் படிப்பவன் 

நான் பெண்  இடை பார்க்க வந்தவன் அல்ல 
இடைவிடாமல் படிப்பவன் 

நான் பெண்  நடை பார்க்க வந்தவன் அல்ல 
நன்றாக படிப்பவன்

மொத்தத்தில் நான் சைட்  அடிக்க பிறந்தவன் அல்ல 
சாதிக்க பிறந்தவன் 

என்றான். அவள் ஓடி சென்று சுவற்றில் முட்டினால் தலையை  இரத்தம்  கொட்டியது வெளியே.


1 comment: