Saturday, 27 June 2020

தமிழ் கவிதைகள்

களவாணியின் கண் சிமிட்டலில் 
களவு போனேன் நான்.

அமாவாசை அன்றும் நிலா சோறு எனக்கு 
தேனே உன் முகம் பார்த்து !

தமிழக பெண்களை மீண்டும் பாவாடை தாவணிகளில் 
காண ஆவலாக உள்ளேன் 

ஏய் ! டைரி நீயும் என் நண்பன் போல 
ஏன் என்றால் என் சுக துக்கங்களை 
உன்னிடம் பகிர்ந்து கொள்கிறேனே !

எருமையல்ல நான் அடைமழைபோல் வசை  மொழியில் நனைந்து  திளைக்க.
கவரிமான் மயிரிழை உதிர்வது போல் வசைமொழி உதிர்ந்தால் உயிர்துறப்பேன்.

ஏக்கங்கள் ஆயிரம்

        
                 ஒரு நாள் மாலைப் பொழுது மணி,  வீட்டிற்கு  செல்வதற்காக இரயில்வே நிலையத்தில் காத்துக்கொண்டு  இருந்தான். ஏனெனில்  அவன் வெளியூரில்  தங்கி  மேலாண்மை (MBA Humanresource)  பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். மேலும்  அவன் உளவியல் பட்டப்படிப்பு முடித்தவன். சொந்த ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த அவனுக்கு அருகில் ஒரு இளம்பெண் வந்து  நின்றாள். இவன் அவளை உற்று நோக்கினான். அவள் ஏதோ சோகத்தில் இருப்பது போல் இவனுக்கு தோன்றியது.


               சிறிது நேரத்தில் இரயில் வந்தது. இருவரும் ஒரே கம்பார்ட்மெண்டில் ஏறினர். இரவு நேரம் என்பதால் அருகில்  இருந்த  அனைவரும் உறங்கினர்.  ஆனால்  அவள் மட்டும் உறங்கவில்லை . ஏதோ சோகத்துடன் யோசித்துக் கொண்டிருந்தான். மணி அவளை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டு கொண்டிருந்தான் . சிறிது நேரத்திற்கு பிறகு அவள் எழுந்து படிக்கட்டு அருகில் சென்றாள் .
அவனும் பின் தொடர்ந்தான். திடீரென்று அவன் அதிர்ச்சி அடைந்தான்.


           ஏனென்றால் அவள் தற்கொலைக்கு முயற்சி செய்தாள். பின்பு அவளை அவன் தடுத்து நிறுத்தினான். பின்பு என்ன  கேட்டான் யோசிங்க.. யோசிங்க.. ஏன்  தற்கொலைக்கு முயற்சித்தாய் என்று கேட்டுருப்பான் என்று  தானே நினைக்கிறீங்க அதான் இல்லை. உரையாடல் இதோ .

மணி :   என்ன பண்ற 

அவள் : உன் கிட்ட அவசியம் சொல்லணுமா யாருடா நீ ?

மணி :  சாவப்போறியா ?

அவள் : பார்த்தா தெரியலையா?

மணி :   சவாப் போற உனக்கு எதுக்கு கழுத்துல செயின் காதுல                                தோடு லாம் ?

அவள் : திருடனா நீ ?

மணி :  இல்லை வீணாபோய்டுமேன்னு தான் .

அவள்: (கழற்றினாள்) இந்தா வச்சிக்கோ.

மணி :  செல்போன் வச்சிருக்கியா ?

அவள்: ஏன் அதுவும் வேணுமா ?

மணி :  அத  சொல்லித்தான் புரியணுமா ?

அவள் : இந்தா (சாவ போற எனக்கு எதுக்கு அது)

மணி : உன் பேக் எங்க இருக்கு?

அவள்: என்ன நிம்மதியா சாக கூட விடமாட்டியா ?

மணி  :  சாவ போற உனக்கு எதுக்கு அது அதான்.

அவள்:  அந்த சிவப்பு நிற பேக் என்னது தான்.

மணி :  ஓகே 

அவள்:  இவ்வளோ கேக்குற நான் ஏன் சாவப் போறேன்னு கேட்டியா?

மணி :   அது எதுக்கு எனக்கு சரி ஆசைப் படுற சொல்லு 

அவள் :  எங்க அப்பாவும் அம்மாவும் வெளிநாட்டுல இருக்காங்க                               நான் இங்க என் பாட்டி வீட்டுல இருக்கேன்.என்ன வந்து                                 பாக்குறது கூட இல்ல. பணத்த  மட்டும் அனுப்புறாங்க                                   யாருக்கு வேணும் பணம் .

மணி :   இதோ பார் . ஆண்டவன் யாருக்கும் எல்லாத்தையும்                                        கொடுக்குறது இல்ல. இப்ப பார் எனக்கு  பாசமுள்ள  அப்பா                        அம்மா வ  கொடுத்துட்டு பணத்த கொடுக்கல 
                 என் கிட்ட பாசம் இருக்கு  உன்கிட்ட பணம் இருக்கு ஷேர்                              பண்ணிக்கலாம் . உனக்கு எப்போ சோகம் வருதோ அப்ப                            கால் பண்ணு நான் பாசம் தரேன் . எனக்கு பணம் 
                 தேவைப்படும் போது உனக்கு கால் பண்றேன்.

அவள் : ஏன்  என் சொத்தை  எழுதி வாங்கிறதுக்காக வா (                                                கருப்புசாமி   குத்தகைதாரர் ஸ்டைல்ல)

மணி : ஏன்பா என்ன அப்டி நெனச்சிட்டு நான் அப்படிப்பட்ட ஆளு                             இல்லப்பா .(பருத்திவீரன் ஸ்டைல்ல)

அவள் :  நல்லா  பேசுற  என்ன பண்ற 

மணி :  BSC Psycholagy MBA Human Resource பண்ணிட்டுருக்கேன் 

அவள் : சரி நான் இறங்குற ஸ்டேஷன் வந்துருச்சி  நான் வீட்டுக்கு                           போறேன்.

மணி: ம்ம் நல்ல பொண்ணு  இந்த உன்னோட பொருள்லாம் 

அவள் :  ம்ம் ஓகே  bye

மணி  ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்தான்.





Thursday, 25 June 2020

மெய்யான அழுக்கு

        நவீன் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தான். அவனுக்கு அது PROJECT DELIVERY TIME என்பதால் அவ‍ன் பரபரப்பாக காணப்பட்டான். அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு அருகில் ஒரு வெளிமாநில குடும்பம் வந்து தங்கியிருந்தது. அவன் மிகுந்த வேலை காரணமாக அவ‍ர்களை கவனித்ததே இல்லை. எப்போதும் காதில் HEADSET போட்டுக் கொண்டு செல்வது அவனது பழக்கம். அதும் அவனுக்கு பணக்காரர்களை கண்டால் பிடிக்காது. அவர்கள் ஏழைகளை மதிக்க மாட்டார்கள். ஏளனமாக பார்ப்பார்கள் கேலி செய்வார்கள் மனதைப் புண்படுத்துவார்கள் வேதனைகளை புரிந்து கொள்ள மாட்டார்கள் எண்ணம், ஆனால் அதை எப்போதும் வெளிக் காட்டிக்கொள்வதில்லை. நாட்கள் கடந்தன. PROJECT DELIVERY யும் முடிந்தது. ஒருநாள் தற்செயலாக அந்த குடும்பத்தை பார்த்தான். அவர்கள்வெளிமாநிலத்திலிருந்து இங்கே பொம்மை விற்றுக்கொண்டிருந்தனர். 

        நவீன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அந்த குடும்பத்தில் இரண்டு சின்ன ஆண்குழந்தைகள் இருந்தது. அதில் இளையமகன் மண்ணில் உருண்டு பிரண்டு உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனை பார்த்த நவீன் அருவருப்பு அடைந்தான் அவன் முகத்தை சுளித்த வண்ணம் அலுவலகத்தை அன்று சென்றடைந்தான். நாட்கள் சென்றன, அன்று அவனுக்கு விடுமுறை ஆதலால் வெளியில் எங்கும் செல்லவில்லை. அதனால் அவனுக்கு சரியாக பொழுது போகவில்லை உடன் இருக்கும் நண்பர்களும் கும்பகர்ணன் போல் உறங்கி கொண்டிருந்தனர். உடனே அவன் எழுந்து சென்று டீ குடிக் புறப்பட்டான். அருகில் இருந்த ஐஸ்வர்யா பேக்கரியில் ஒரு 7 ரூபாய் கொடுத்து டீ குடித்துவிட்டு மீண்டும் புறப்பட்டான். ஆனால் அவனுக்கு திரும்ப உடனே தனது அறைக்கு வர விருப்பம் இல்லை.உடனே அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையில் உட்காந்து கொண்டுபோக வர இருக்கும் பேருந்துகளை நோட்டம் விட்டு கொண்டிருந்தான். 

அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவன் பொம்மை விற்றுக் கொண்டிருப்பதையும் கண்டான். பின்பு அந்த குழந்தை ரோட்டில் விளையாடி கொண்டிருப்பதையும் கண்டான். அவனுக்கு மீண்டும் அருவருப்பாக தோன்றியது.

   அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்று, அதிலிருந்து ஒரு கறுப்பு மனிதர் அந்த குழந்தையை பார்த்து சிரித்து அவனை கிள்ளி முத்தமிட்டார். பின்பு இரண்டு பொம்மைகளை
வாங்கிக்கொண்டு பார்த்து விளையாடுப்பா என்று கூறிச்சென்றார். இதைப் பார்த்த நவீனுக்கு "சுளீர்" என்ற வலி மனதில் தோன்றியது, ஊரில் உள்ள அனைவரையும் குறை கூறிய அவன் மனதிலும் அந்த பணஅதிகார அரக்கன் இடம் பெற்றதை எண்ணி வருந்தினான் மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்று கூறிக்கொண்டே அந்த குழந்தையை நோக்கிப் புறப்பட்டான் கையில் இனிப்புடன்,