நவீன் ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன். அந்த குடும்பத்தில் இரண்டு சின்ன ஆண்குழந்தைகள் இருந்தது. அதில் இளையமகன் மண்ணில் உருண்டு பிரண்டு உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனை பார்த்த நவீன் அருவருப்பு அடைந்தான் அவன் முகத்தை சுளித்த வண்ணம் அலுவலகத்தை அன்று சென்றடைந்தான். நாட்கள் சென்றன, அன்று அவனுக்கு விடுமுறை ஆதலால் வெளியில் எங்கும் செல்லவில்லை. அதனால் அவனுக்கு சரியாக பொழுது போகவில்லை உடன் இருக்கும் நண்பர்களும் கும்பகர்ணன் போல் உறங்கி கொண்டிருந்தனர். உடனே அவன் எழுந்து சென்று டீ குடிக் புறப்பட்டான். அருகில் இருந்த ஐஸ்வர்யா பேக்கரியில் ஒரு 7 ரூபாய் கொடுத்து டீ குடித்துவிட்டு மீண்டும் புறப்பட்டான். ஆனால் அவனுக்கு திரும்ப உடனே தனது அறைக்கு வர விருப்பம் இல்லை.உடனே அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடையில் உட்காந்து கொண்டுபோக வர இருக்கும் பேருந்துகளை நோட்டம் விட்டு கொண்டிருந்தான்.
அப்போது அந்த குடும்பத்தை சேர்ந்த ஒருவன் பொம்மை விற்றுக் கொண்டிருப்பதையும் கண்டான். பின்பு அந்த குழந்தை ரோட்டில் விளையாடி கொண்டிருப்பதையும் கண்டான். அவனுக்கு மீண்டும் அருவருப்பாக தோன்றியது.
அப்போது அங்கு ஒரு கார் வந்து நின்று, அதிலிருந்து ஒரு கறுப்பு மனிதர் அந்த குழந்தையை பார்த்து சிரித்து அவனை கிள்ளி முத்தமிட்டார். பின்பு இரண்டு பொம்மைகளை
வாங்கிக்கொண்டு பார்த்து விளையாடுப்பா என்று கூறிச்சென்றார். இதைப் பார்த்த நவீனுக்கு "சுளீர்" என்ற வலி மனதில் தோன்றியது, ஊரில் உள்ள அனைவரையும் குறை கூறிய அவன் மனதிலும் அந்த பணஅதிகார அரக்கன் இடம் பெற்றதை எண்ணி வருந்தினான் மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்று கூறிக்கொண்டே அந்த குழந்தையை நோக்கிப் புறப்பட்டான் கையில் இனிப்புடன்,
No comments:
Post a Comment