இளம்பரிதி ஏழை குடும்பத்தை சேர்ந்த இளைஞன். இளமையில் வறுமையின் பிடியில் சிக்கி துன்பப்பட்டுக் கொண்டிருந்தான். கடவுளின் அருளால் பெற்ற அறிவையும் அரசிடம் இருந்து பெற்ற நிதியுதவியும் கொண்டு பொறியியல் தேறினான். இருப்பினும் வறுமை அவனை விடாமல் துரத்தியது. நெடுநாள் வேலை கிடைக்கவில்லை வருந்தினான். வெம்பினான் தவித்தான் இறுதியில் அவனுக்கு ஒரு தனியார் கம்பனியில் குறைந்த ஊதியத்தில் வேலை கிடைத்தது. முதல் நாள் கம்பனியில் கால் வைத்த நாளே அவனுக்கு கண்டத்தை அதிர்ச்சி காத்திருந்தது. அந்த கம்பனியில் நாகரிகம் என்னும் பெயரில் ஆண்களும் பெண்களும் நடந்து கொண்டது அவனுக்கு பிடிக்கவில்லை.இருப்பினும் அவனின் வறுமை நிலையை நினைத்து நாட்களை ஓட்டினான்.
ஒரு நாள் வீட்டிற்கு செல்வதற்காக ரயில் நிலையத்தில் காத்திருந்தான்.
அப்போது அவனுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த பெண் சிந்தியாவை கண்டான். சிந்தியா அழகானவள் அதே சமயம் பயங்கர திமிர் பிடித்தவள்.சிந்தியா கல்லூரியில் இளம்பரிதியை மதித்ததே இல்லை. இப்போது மட்டும் மதிக்கவ போகிறாள் என்று எண்ணி கொண்டே அருகில் சென்றான். எப்படி இருக்கிறாய் என்று விசாரித்தான். அவள் ஏதோ அசிங்கத்தை கண்டதை போல தலையை திருப்பி கொண்டாள். ம்
இவனுகெல்லாம் கிடைக்கும் போது எனக்கு கிடைக்காதா ? வந்துட்டான் விசாரிக்க என்று பொரிந்து தள்ளினாள். இதை கண்டு இளம்பருதி வருத்தம் கொள்ளவில்லை எதிர்பார்த்தது தானே. இருவரும் ரயிலில் ஏறினர். ரயிலில் சரியான இட நெருக்கடி.
பயணி: தம்பி இறங்க போறியாப்பா?
இளம்பரிதி: இல்லங்க (அடுத்த ஸ்டேஷன் வர இன்னும் 10 நிமிடம் ஆகுமே? என்று எண்ணிக் கொண்டே).
பயணி: கொஞ்சம் நகருப்பா போகணும்.
இளம்பரிதி: என்ன சார் குதிக்க போறிங்களா ? என்றான் கடுப்பாக .
ரயிலில் சிரிப்பொலி , அவர் முகத்தில் கோபம் சரி விடுங்க பாஸ் என்று அருகில் இருந்தவர் சொல்ல அவர் சாந்தமனார்.
அந்த ரயில் சென்னையிலிருந்து திருச்செந்தூர் வரை செல்லும் விரைவு வண்டி. இளம்பரிதி சிதம்பரத்தை சேர்த்தவன். சிந்தியா தஞ்சையை சேர்ந்தவள். வண்டி மாம்பலத்தை தாண்டியவுடன் உட்கார சிறிது இடம் கிடைத்தது இளம்பரிதிக்கு. சிந்தியா நின்று கொண்டே வந்தாள். உட்கார இடம் கிடைத்தவுடன் இளம்பரிதி ஒரு குட்டி தூக்கம் போட்டான். வண்டி தாம்பரத்திற்கு வந்தது. இருவர் தாம்பரம் வந்துவிட்டது என்று பேசி கொண்டிருந்தனர். அரை தூக்கத்தில் இருந்த இளம்பரிதிக்கு சிதம்பரம் என்று காதில் விழுந்தது. உடனே விழித்து கொண்டு பேக்கை எடுத்தான் சிந்தியாவின் ஷால் அவனது பேக்கின் மீது விழுந்திருப்பதை காணாமல். அவளுடைய ஷால் அவனுடைய கையோடு வந்துவிட்டது. அப்போது சிந்தியா கடுமையாக முறைத்தாள். நம்ம ஆள் பம்மிக்கொண்டே ஷாலை கொடுத்துவிட்டு வந்து தன் தொழிலை தொடர்ந்தான். ரயிலே உறங்கியதை பார்த்து சிந்தியாவும் உறங்கினாள். நள்ளிரவில் அப்படியொரு பயங்கர சத்தம்.
அது இதுவரை உணராத பயங்கர சத்தம் என்பதை உணர்வதற்குள் அந்த விபத்து ஏற்பட்டது. நிறைய பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது, அதிஷ்டவசமாக இளம்பரிதி ஓரிரு காயங்களுடன் உயிர் தப்பினான். இரயில் முழுக்க அலறல், இரத்த வெள்ளம் , துண்டான தலைகள், கைகள், கால்கள் சதை துணுக்குகள். என அலங்கோலமாக இருந்தது. கை ஏற்பட்டது இளம்பரிதிக்கு. இருப்பினும் சுதாரித்து கொண்டு சிந்தியவை தேடினான். பலத்த காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் அவள் இருந்தாள் . அவளை தூக்கிக் கொண்டு வந்து வெளியே வருவதற்குள் இரயில் மருத்துவ வாகனங்கள் வந்தன. அரை மயக்கத்தில் இருந்த அவள் கண் விழித்து பார்த்தாள் . தான் இளம்பரிதி கைகளில் இருப்பதாய் உணர்ந்தாள் . அவளை கொண்டு போய் வாகனங்களில் சேர்த்து விட்டு மீண்டும் சென்று ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவினான் .சிலரை மீட்டு வாகனங்களில் சேர்த்து சேர்த்து மருத்துவமனைக்கு விரைந்தான். அங்கே மருத்துவர்கள் சிலர் வெளியே நின்று கொண்டு சிந்தியாவை பற்றி விசாரித்து கொண்டிருந்தனர் .அப்போது அங்கு வந்த இளம்பரிதி என்ன நடந்தது என்று வினவினான். அப்போது நீங்கள் யார் அந்த பெண்ணுக்கு உறவா என்று கேட்டனர்.
இளம்பரிதி அதற்கு நான் அவளின் நண்பன் என்றான். உள்ளிருந்து அதை கேட்ட அவளின் கண்களில் கண்ணில் சிந்தியது. மருத்துவர்கள் சிகிச்சை செய்து விட்டு வந்து இந்த மருந்துகளை உடனே வாங்கி வருமாறு கூறினர்.அவன் சட்டை பையில் கையை விட்டான் அவனுடைய முதல் மாத சம்பளம் 6000 ருபாய் மட்டுமே இருந்தது. அதை கொண்டு மருந்து வாங்கி வந்தான். அவள் கண்விழிக்கும் வரை அல்லது அவள் பெற்றோர் வரும் வரை இருந்து விட்டு செல்லலாம் என்று காத்திருந்தான்.
அவள் கண் விழித்தாள். அப்பா , அம்மா அவளை கண்ணிருடன் நோக்கினர். அவளின் கண்களோ அவனை தேடியது. 3 நாட்கள் நகர்தன. அவளை வீட்டிற்கு அழைத்து செல்ல ஆயத்தமானார்கள். மருத்துவமனை வளாகத்தில் அவன் பெயர் கொண்ட கவர் ஒன்று கிடந்தது. அதில் Mr. இளம்பரிதி 6000 என்று எழுதப்பட்டு இருந்தது. அதை கண்டவுடன் அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. என்னுடைய 30,000 பணம் எனக்கு பயன்படவில்லை.
அவனுடைய உதவும் எண்ணமே எனக்கு பயன்பட்டிருகிறது. உண்மையில் அவன் தான் நன்றாக வாழ பிறந்தவன் அனைவருக்கும் பயன்படும் நல்ல வாழ்க்கை . இளம்பரிதி வீட்டிற்கு சென்றடைந்தான். தெருவில் தன் நண்பனை பார்த்து 2000 ருபாய் கடனாக தருமாறு கேட்டான். வறுமை அவனை விடாமல்.துரத்துகிறது.................................! வறுமைக்கு அவன் மீது அவ்வளவு காதல் போல.,............................! சிந்தியா அவன் மீது காதலில் விழுந்தாள் ...........