ஒரு நாள் மாலைப் பொழுது மணி, வீட்டிற்கு செல்வதற்காக இரயில்வே நிலையத்தில் காத்துக்கொண்டு இருந்தான். ஏனெனில் அவன் வெளியூரில் தங்கி மேலாண்மை (MBA Humanresource) பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தான். மேலும் அவன் உளவியல் பட்டப்படிப்பு முடித்தவன். சொந்த ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த அவனுக்கு அருகில் ஒரு இளம்பெண் வந்து நின்றாள். இவன் அவளை உற்று நோக்கினான். அவள் ஏதோ சோகத்தில் இருப்பது போல் இவனுக்கு தோன்றியது.
சிறிது நேரத்தில் இரயில் வந்தது. இருவரும் ஒரே கம்பார்ட்மெண்டில் ஏறினர். இரவு நேரம் என்பதால் அருகில் இருந்த அனைவரும் உறங்கினர். ஆனால் அவள் மட்டும் உறங்கவில்லை . ஏதோ சோகத்துடன் யோசித்துக் கொண்டிருந்தான். மணி அவளை ஓரக்கண்ணால் நோட்டம் விட்டு கொண்டிருந்தான் . சிறிது நேரத்திற்கு பிறகு அவள் எழுந்து படிக்கட்டு அருகில் சென்றாள் .
அவனும் பின் தொடர்ந்தான். திடீரென்று அவன் அதிர்ச்சி அடைந்தான்.
ஏனென்றால் அவள் தற்கொலைக்கு முயற்சி செய்தாள். பின்பு அவளை அவன் தடுத்து நிறுத்தினான். பின்பு என்ன கேட்டான் யோசிங்க.. யோசிங்க.. ஏன் தற்கொலைக்கு முயற்சித்தாய் என்று கேட்டுருப்பான் என்று தானே நினைக்கிறீங்க அதான் இல்லை. உரையாடல் இதோ .
மணி : என்ன பண்ற
அவள் : உன் கிட்ட அவசியம் சொல்லணுமா யாருடா நீ ?
மணி : சாவப்போறியா ?
அவள் : பார்த்தா தெரியலையா?
மணி : சவாப் போற உனக்கு எதுக்கு கழுத்துல செயின் காதுல தோடு லாம் ?
அவள் : திருடனா நீ ?
மணி : இல்லை வீணாபோய்டுமேன்னு தான் .
அவள்: (கழற்றினாள்) இந்தா வச்சிக்கோ.
மணி : செல்போன் வச்சிருக்கியா ?
அவள்: ஏன் அதுவும் வேணுமா ?
மணி : அத சொல்லித்தான் புரியணுமா ?
அவள் : இந்தா (சாவ போற எனக்கு எதுக்கு அது)
மணி : உன் பேக் எங்க இருக்கு?
அவள்: என்ன நிம்மதியா சாக கூட விடமாட்டியா ?
மணி : சாவ போற உனக்கு எதுக்கு அது அதான்.
அவள்: அந்த சிவப்பு நிற பேக் என்னது தான்.
மணி : ஓகே
அவள்: இவ்வளோ கேக்குற நான் ஏன் சாவப் போறேன்னு கேட்டியா?
மணி : அது எதுக்கு எனக்கு சரி ஆசைப் படுற சொல்லு
அவள் : எங்க அப்பாவும் அம்மாவும் வெளிநாட்டுல இருக்காங்க நான் இங்க என் பாட்டி வீட்டுல இருக்கேன்.என்ன வந்து பாக்குறது கூட இல்ல. பணத்த மட்டும் அனுப்புறாங்க யாருக்கு வேணும் பணம் .
மணி : இதோ பார் . ஆண்டவன் யாருக்கும் எல்லாத்தையும் கொடுக்குறது இல்ல. இப்ப பார் எனக்கு பாசமுள்ள அப்பா அம்மா வ கொடுத்துட்டு பணத்த கொடுக்கல
என் கிட்ட பாசம் இருக்கு உன்கிட்ட பணம் இருக்கு ஷேர் பண்ணிக்கலாம் . உனக்கு எப்போ சோகம் வருதோ அப்ப கால் பண்ணு நான் பாசம் தரேன் . எனக்கு பணம்
தேவைப்படும் போது உனக்கு கால் பண்றேன்.
அவள் : ஏன் என் சொத்தை எழுதி வாங்கிறதுக்காக வா ( கருப்புசாமி குத்தகைதாரர் ஸ்டைல்ல)
மணி : ஏன்பா என்ன அப்டி நெனச்சிட்டு நான் அப்படிப்பட்ட ஆளு இல்லப்பா .(பருத்திவீரன் ஸ்டைல்ல)
அவள் : நல்லா பேசுற என்ன பண்ற
மணி : BSC Psycholagy MBA Human Resource பண்ணிட்டுருக்கேன்
அவள் : சரி நான் இறங்குற ஸ்டேஷன் வந்துருச்சி நான் வீட்டுக்கு போறேன்.
மணி: ம்ம் நல்ல பொண்ணு இந்த உன்னோட பொருள்லாம்
அவள் : ம்ம் ஓகே bye
மணி ஒரு பெண்ணின் உயிரை காப்பாற்றிய மகிழ்ச்சியுடன் பயணத்தை தொடர்ந்தான்.
No comments:
Post a Comment